அஜித் மச்சினிச்சி ஷாமிலி தொடங்கிய ஷீ ஆர்ட் கேலரி.. திறப்பு விழாவிற்கு யார் யார் வந்தாங்க தெரியுமா?

சென்னை : அஜித்தின் மச்சினி நடிகை ஷாமிலியின் ஷீ ஆர்ட் கேலரி திறப்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அஞ்சலி, தைப்பூசம், போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலியின் அழகான சிரிப்பு, வசீகரமான முகம் நம் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது.

ஷாமிலி சிறுவயதில் நடித்த அனைத்து படங்களும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து வந்தது.

அஞ்சலி பாப்பா: ராஜநடை, அஞ்சலி, மலூடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஷாமிலி, துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி போன்ற சாமி படங்களில் நடித்து பலருக்கும் இவர் தெய்வக் குழந்தையாகவே தெரிந்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்றார்.

தெய்வக்குழந்தை: இயக்குநர் ராமநாராயணன் இயக்கிய பல சாமி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக ராமநாராயணன் இயக்கி துர்கா படம் இவர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கதாநாயகியாக: இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் பரிச்சயமான ஷாமிலி தெலுங்கில் வெளியான ஓய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழில் விக்ரம்பிரபு நடித்த வீரசிவாஜி திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். ஷாமிலி நடிகை மட்டுமில்லாமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தி பல ஓவிய படைப்புகளை உருவாக்கி உள்ளார்.

ஆர்ட் கேலரி: இதையடுத்து, தன்னுடைய ஓவியங்களை பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் ‘ஷீ’ என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை தொடங்கி உள்ளார்.இந்த தொடக்க விழாவில், ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா, மணிரத்னம், ஏ.ஆர் ரஹ்மான், அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.