வில்வாத்ரிநாதர் திருக்கோயில் அனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, ஶ்ரீபரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது. அவர் தன் கோடாளியை கடலில் பாய்ச்சி, அதிலிருந்து நிலத்தை இப்பூமியுடன் இணைத்தார் என்பது புராணம். மேற்கு தொடர்ச்சி மலை கேரளத்தில் கிழக்கு எல்லையாக இருக்கிறது. கேரளத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது, சென்று பார்த்தால் பிரமிப்பூட்டும் வண்ணம் இருக்கும், கண்டால் தான் அதன் அழகை ரசிக்க முடியும். திருச்சூர் மாவட்டத்தில் தாலப்பில்லி தாலுகாவில் இருக்கிறது திருவிவாமலா என்னும் மலைத்தொடர். […]