திருவனந்தபுரம்:ஓரின சேர்க்கைக்காக பிளஸ் 2 மாணவியை கடத்திய டியூஷன் ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி, இப்பகுதியில் 33 வயது ஆசிரியையின் வீட்டுக்கு டியூஷன் சென்று வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன் டியூஷனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீகாரியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாணவியையும், ஆசிரியையும் மீட்ட போலீசார் போக்சோ பிரிவில் ஆசிரியையை சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் ஆசிரியை ஜாமீனில் வந்த நிலையில் , இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மாணவி மீண்டும் மாயமானார்.
திருவனந்தபுரம் மருத்துவக்கல்லுாரி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அதே ஆசிரியை எர்ணாகுளத்துக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் பிடித்தனர். மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆசிரியை மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement