வாஷங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் இன்று அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த மண்டபத்தில் இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் நான் பார்க்கிறேன். ஒரு மினி இந்தியாவே இங்கு உருவானது போல் இருக்கிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் போன்ற அழகான படங்களை காட்டியதற்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 3 நாட்களில் இந்திய அமெரிக்க உறவில் புதிய பயணம் துவங்கியுள்ளது. இந்த பயணம் மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்டு, திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாக செயல்படும் இந்தியாவில் போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முடிவு இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஒரு சிறந்த மைல்கல்லாக இருக்கும். மேலும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உற்பத்தி. தொழில்துறை விநியோகச் சங்கிலியில் வளமான எதிர்காலத்திற்கான சிறந்த பங்களிப்பை வழங்கும்.
கூகுள் மைக்ரான், அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்ய உள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு உருவாகும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையெழுத்தான ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் விண்வெளி ஆராய்ச்சியில் பல வாய்ப்புகளை வழங்கும். நாசாவுடன் இணைந்து இந்தியா விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது.
பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்படும். ஹெச்1பி விசா புதுப்பிப்பை அமெரிக்காவிலேயே செய்து கொள்ளலாம் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது: இந்தியாவின் இந்த வளமான முன்னேற்றத்திற்குக் காரணம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டுமே. மோடி தனியாக எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement