MotoGP Bharat – 2023 மோட்டோஜிபி பாரத் டிக்கெட் வாங்குவது எப்படி ?

வரும் செப்டம்பர் 22 முதல் 24 முதல் நடைபெற உள்ள மோட்டோ ஜிபி பாரத் மோட்டார்சைக்கிள் பந்தயம் சர்வதேச புத் சர்க்யூடில் நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் விலை ரூ.800 முதல் ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற மோட்டோ ஜிபி பந்தயம் முதன் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.

மோட்டோஜிபி பந்தயத்திற்கு ஆய்வு பணிகள் சர்வதேச புத் சர்க்யூடில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இறுதி முடிவு விரைவில் எட்டப்படலாம். முன்பாகவே நுழைவுச்சீட்டு விற்பனை புக் மை ஷோ இணையதளத்தில் துவங்கியுள்ளது.

MotoGP Bharat

கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ள போட்டியை நேரடியாக இந்திய ரசிகர்கள் கானுவதற்கு டிக்கெட் விற்பனை Book My Show இணையதளத்தில் துவங்கப்பட்டுள்ள நிலை ஆரம்ப விலை ரூ.800 முதல் துவங்கி பல்வேறு சலுகைகள் பெற்ற பிரீமியம் MotoGP Village விலை ரூ.40,000 ஆகும்.

குறிப்பாக அனைத்து டிக்கெட்டிலும், Moto3, Moto2, மற்றும் MotoGP என மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளை காணலாம். இந்த பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் முன் பதிவு செய்தவர்களுக்கு  மட்டும் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தியாவில் மோட்டோஜிபி பந்தையத்தை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஜியோ சினிமா மூலம் பார்க்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.