திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர், நாயகியாகவும் என்ட்ரி கொடுத்திருந்தார்.
தமிழில் இவர் நடித்திருந்த நேரம் படம் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து, தனுஷ், ஜெய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மலையாளத்தின் பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
சிக்கனை ஒரு புடி புடித்த நடிகை நஸ்ரியா: நடிகை நஸ்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாகவே இவர் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தமிழில் நேரம் படம் மூலம் இவர் சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இந்தப் படம் நஸ்ரியாவிற்கு ஏராளமான தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
தமிழில் தனுஷ், ஜெய் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் ராஜா ராணி போனற் படங்களில் நடித்துள்ளார் நஸ்ரியா. தமிழில் குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ஃபேன் பேஸ் காணப்படுகிறது. மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த நஸ்ரியா, ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தன்னுடைய 19வது வயதில் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார் நஸ்ரியா. இவர்களின் திருமணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவருக்கும் இடையில் 12 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது. தன்னுடைய திருமணத்தை தொடர்ந்து படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த நஸ்ரியா, தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
மலையாளம் மற்றும் தெலுங்கில் இவர் அடுத்தடுத்த படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக இந்த இடைவெளியின் போதே தன்னுடைய கணவரின் படமான டிரான்ஸ் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் அவர் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் நானியுடன் அவர் இணைந்து நடித்த அடடே சுந்தரா என்ற படம் சமீபத்தில் வெளியாகி ரசிர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக தமிழிலும் நஸ்ரியா ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே அவரது கணவர் பகத் பாசில், அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சூழலில் நஸ்ரியாவும் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நஸ்ரியா. அடுத்தடுத்த பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய போட்டோஷுட் புகைப்படங்கள், கணவருடனான புகைப்படங்கள், விடுமுறை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் பகிர்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சாப்பிடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதில் பர்கர், சிக்கன் 65, பிரெஞ்ச் பரைஸ் என ஏராளமான ஐட்டங்கள் காணப்படுகின்றன.
இவை அனைத்தையும் மிகுந்த ஆவலுடன் ஒரு வெட்டு வெட்டுகிறார் நஸ்ரியா. குறிப்பாக சிக்கன் 65, பர்கர் இதை தொடர்ந்து ஜூஸ் என அடுத்தடுத்த ஐட்டங்களை உள்ளே தள்ளுகிறார். இதற்கிடையில், பிஸ்கெட்டுகள் போன்றவற்றையும் சாப்பிடுகிறார். இந்த உணவுகளை சாப்பிடுவதில் நிதானத்தை அவர் கடைபிடிக்காமல் அவசரமாக சாப்பிடுகிறார். அதிக பசியோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ள நிலையில், நமக்கு சோறு முக்கியம் என கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
Sooru Than Mukkiyam ✨😁 pic.twitter.com/Z144MZwwQm
— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) June 23, 2023