சென்னை: காமெடி நடிகையாக சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஷாலு ஷம்மு மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு டெம்பரேச்சரை அதிகரித்து வரும் ஷாலு ஷம்மு தனது நீண்ட நாள் கனவை அடைந்து விட்டதாக அட்டகாசமான போட்டோவுடன் போஸ் கொடுத்துள்ளார்.
ஜாகுவார் ப்ரீமியம் கார் வாங்கிய சந்தோஷத்தில் ஷாலு ஷம்மு பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விளம்பரங்களில் வருமானம்: சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்முவுக்கு ஏகப்பட்ட விளம்பரங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
விளம்பரங்களை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு அதன் மூலம் அதிகளவில் சம்பாதித்து வருகிறார். மேலும், அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என வருமானத்தை ஈட்டி வருகிறார்.
கவர்ச்சிக்கு பஞ்சமில்லை: தாறுமாறாக ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இணையவாசிகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோயராக மாற்றி வருகிறார் ஷாலு ஷம்மு.
ஜிம்மில் அதிக நேரத்தை செலவிட்டு கட்டுக்கோப்பாக தனது உடல் அமைப்பை வைத்துக் கொண்டு இவர் வெளியிடும் ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வேறலெவலில் ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனிப் போட்டு வருகின்றன.
ஜாகுவார் கார் வாங்கியாச்சு: தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது என ஜாகுவார் கார் வாங்கிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் சற்றுமுன் ஷேர் செய்துள்ளார் ஷாலு ஷம்மு.
கடுமையாக இத்தனை ஆண்டுகள் உழைத்த பலன் காரணமாக இப்படியொரு கார் வாங்கிருக்கீங்க சூப்பர் ஷாலும்மா என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விலை எவ்வளவு: ஜாகுவார் F Pace காரின் விலை சென்னையில் சுமார் 98 லட்சம் இருக்கும் எனக் கூறுகின்றனர். எப்படி பார்த்தாலும், ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எல்லாம் சேர்த்தால் ஒரு கோடி மதிப்பிலான காரை நடிகை ஷாலு ஷம்மு வாங்கி இருப்பது ஆச்சர்யமான விஷயம் தான் என நெட்டிசன்கள் ஷாலு ஷம்மு போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள HF கார்ஸ் நிறுவனத்தில் இந்த ஜாகுவார் காரை ஷாலு ஷம்மு வாங்கி உள்ளார். கார் விலையே ஒரு கோடி என்றால் ஷாலு ஷம்முவின் சொத்து பல கோடி இருக்குமே என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.