சென்னை: மாமன்னன் பட ஆடியோ ரிலீஸ் சின்னத்திரையில் ஒளிபரப்பானதிலிருந்து அது குறித்த எழுப்பப்பட்டு வரும் பல்வேறு சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை.
இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், நடிகர் கமலஹாசனுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் சூடாக பதிவிட்டு கொண்டே தான் இருக்கின்றனர் .
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான வலைப்பேச்சு அந்தணன் இந்த சர்ச்சை குறித்து எழுப்பி உள்ள அவரது சந்தேகங்கள் பலரை யோசிக்க வைத்து வருகிறது.
மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர்மகன் படம் வந்த சமயத்தில் அந்த படத்தினாலும், அந்தப் படத்தில் வரும் பாடலினாலும் தாங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்ற மனக்குமுறலை நடிகர் கமலஹாசன் முன்பு கொட்டி தீர்த்து இருந்தார்.மாரி செல்வராஜின் இந்த பேச்சுக்கு, ஆமாம்…’தேவர் மகன்’ படம் சாதி பெருமை பேசும் படம் தான் என்று ஒரு தரப்பினரும்,
தேவர் மகன் பட பெயரில் ஜாதி இருந்தாலும் அந்த குறிப்பிட்ட சாதி மக்களின் வாழ்வியலில் இருந்த குறைகளை சுட்டிக் காட்டி அவர்களை திருத்துவது போன்ற கருத்துக்களை கொண்ட படமாக தான் இருந்ததாக மற்றொரு தரப்பினரும் மாற்றி மாற்றி கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.தற்பொழுது இந்த சர்ச்சை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ள மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்தை கூறும் போது தேவர் மகன் படம் வந்த சமயத்தில் போற்றி “பாடடி பொண்ணே” என்ற பாடலால் தான் மனப்பிறழ்விற்கு உள்ளானதாக கமலுக்கு கடிதம் எழுதிய மாரி செல்வராஜ் அந்த பாடலுக்கு இசை அமைத்த இளையராஜாவை பற்றி எதுவும் பேசாததற்கு காரணம் என்ன..?
இளையராஜா நினைத்திருந்தால் அந்தப் பாடல் வரிகளை தவிர்த்து இருக்கலாம் அல்லது அந்த படத்திற்கு இசையமைக்காமல் கூட இருந்திருக்கலாம்,ஏனென்றால் அன்றைக்கு இளையராஜா மிகவும் சக்தி வாய்ந்த இசையமைப்பாளராக இருந்தார். இளையராஜா நினைத்தால் படங்களில் அல்லது பாடல்களிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு சினிமா துறையில் மிகவும் முக்கியம் வாய்ந்த நபராக இருந்தார்.
அப்படி இருந்தும் இளையராஜா எந்த மறுப்பும் சொல்லாமல் அழகான மெட்டுக்களை கொடுத்து அந்தப் பாடல் பெரிய ஹிட் ஆக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.இன்று கமல் முன்பு தனது மனக்குமுறலை கொட்டிய மாரி செல்வராஜ்,சில ஆண்டுகளுக்கு முன்பு கடிதமாகவும் கமலுக்கு எழுதியதாக கூறும் இவர் எந்த இடத்திலும் இளையராஜாவை பற்றி குறிப்பிடாததற்கு என்ன காரணம்..?
மாரி செல்வராஜுக்கு தனது சொந்த ஜாதி பாசமா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அந்தப் படத்தால் பாதிக்கப்பட்ட மாரி செல்வராஜின் கோபம் நியாயமாக இருக்கலாம் ஆனால் அது கமல் என்ற ஒற்றை நபர் மீது மட்டும் குறிப்பிட்ட வன்மமாக இருப்பதன் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.