மும்பை: மாட்டிறைச்சியை காரில் கொண்டு சென்ற நபர் அடித்துக்கொன்ற சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மஹாராஷ்டிரா
மாநிலம் மும்பையை குர்லா பகுதியைச் சேர்ந்தவர் அபான் அப்துல் அன்சாரி,
இவரது நண்பர் நசீர் குலாம் உசேன், இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு காரில்
மாட்டிறைச்சி ஏற்றிக்கொண்டு, நாசிக் நகர் நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
இதையறிந்த
பசு பாதுகாவவலர்கள் என கூறப்படும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த 10 முதல் 15
நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அபான் அப்துல் அன்சாரி,32 உயிரிழந்தார். உடன் வந்த நண்பர்
படுகாயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார்
சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்த அப்துல் அன்சாரி உடலை மீட்ட பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.இதற்கு முன் கடந்த வாரம் இதே போன்று சம்பவம் நடந்தாகவும், இது இரண்டாவது சம்பவம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement