Arjun: அர்ஜுன் மகளுக்கும், தம்பி ராமையா மகனுக்கும் எப்படி பழக்கம், திருமணம் எப்பொழுது?:விபரம் இதோ

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Umapathy Ramaiah: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், உமாபதி ராமையாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, திருமணம் எப்பொழுது என்பது தெரிந்துவிட்டது.

​ஐஸ்வர்யா அர்ஜுன்​ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா பற்றி தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது எப்பொழுது நடந்தது என ரசிகர்கள் வியக்கிறார்கள். இந்நிலையில் திருமணம் குறித்து விபரம் தெரிய வந்துள்ளது.

​Arjun: ஆக்ஷன் கிங் அர்ஜுன் மருமகனாகும் இளம் வாரிசு நடிகர்?: குவியும் வாழ்த்துசுனைனா​பாலாவுடன் Dance ஆடிய நடிகை சுனைனா!​​பல ஆண்டு காதல்​ஐஸ்வர்யா அர்ஜுனும், நடிகர் உமாபதி ராமையாவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்களாம். ஆனால் அந்த காதல் விவகாரம் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டார்களாம். இந்நிலையில் ஐஸ்வர்யா, உமாபதியின் காதல் குறித்து அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த காதலை ஏற்க முடியாது என்று அர்ஜுனும், தம்பி ராமையாவும் அடம்பிடிக்கவில்லையாம்.
​திருமணம்​பிள்ளைகளின் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்களாம் அர்ஜுனும், தம்பி ராமையாவும். எத்தனை காலம் தான் காதலித்துக் கொண்டே இருப்பீர்கள் என ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துவிட்டார்களாம். ஐஸ்வர்யா, உமாபதிக்கு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடக்குமாம்.
​உறுதி செய்யவில்லை​காதல், திருமணம் குறித்து ஐஸ்வர்யா அர்ஜுனும், உமாபதியும் இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். ஐஸ்வர்யாவும், உமாபதியும் காதலித்தார்களா, அதுவும் பல ஆண்டுகளாகவா, இது தெரியாமல் போய்விட்டதே என சினிமா ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​நடிகை ஐஸ்வர்யா​விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் நடிகையானார் ஐஸ்வர்யா அர்ஜுன். பின்னர் சொல்லிவிடவா படத்தில் நடித்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை. உமாபதியோ அதாகப்பட்டது மகாஜனங்களே படம் மூலம் ஹீரோவானார். மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

​அர்ஜுனுக்கு பாராட்டு​மகளின் திருமணம் குறித்து அர்ஜுன் இதுவரை எதுவும் கூறவில்லை. அவர் தன் மகளின் காதலை ஏற்றுக் கொண்டதை அறிந்த ரசிகர்களோ, ஆக்ஷன் கிங் சூப்பர் அப்பா தான். மகள் காதலிக்கிறார் என்றதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்யாமல் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு அப்பா கிடைக்க ஐஸ்வர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
​ரசிகர்கள் கேள்வி​இங்கிலாந்தில் படித்த ஐஸ்வர்யா படங்களில் நடிக்க வந்தபோது, பெரிய படிப்பு படித்த பிள்ளை தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அதனால் அவரின் போஸ்டின் கமெண்ட் பாக்ஸில் போய், உங்களுக்கும், உமாபதிக்கும் திருமணமாமே ஐஸ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

​Vijay: ரவுடியிசம், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு இளைஞர்களை தூண்டுகிறார்: விஜய் மீது போலீசில் புகார்

​அர்ஜுன் அறிவிப்பாரா?​அப்பா அர்ஜுன் இது பற்றி அறிவித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்து ஐஸ்வர்யா அமைதியாக இருக்கிறார் போன்று. அர்ஜுன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலை முடிந்ததும் மகளின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

​Prabhas: விஜய்யை அடுத்து பாகுபலி பிரபாஸை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?: பரபரக்கும் திரையுலகம்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.