தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவருடன் படம் பண்ணுவதற்காக பல முன்னணி நடிகர்களே காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவரது இயக்கத்தில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. விஜய் நடிப்பில் கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இந்தப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் தொடர்ந்து கைதி, மாஸ்டர் படங்களை இயக்கினார். இதனையடுத்து கமலின் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தினை இயக்கினார். இந்தப்படத்தின் வெற்றி தான் லோகேஷ் கனகராஜை சென்சேஷனல் இயக்குனராக மாற்றியது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தரமான ஆக்ஷன் படமாக வெளியான ‘விக்ரம்’ கோலிவுட் சினிமாவே வியந்து பார்க்கும் வெற்றியை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து தான் தற்போது ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், என்னுடைய சினிமாட்டிக் யூனிவர்ஸில் ஒரு பத்து படத்தை இயக்கிவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன், பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என லோகேஷ் கனகராஜ் சொன்னதை ஒரு போல்ட்டான ஸ்டேட்மெண்டாக பார்க்கிறேன்.
Vetrimaaran: தரமா ஒரு சம்பவம்.. ‘வாடிவாசல்’ பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன வெற்றிமாறன்.!
ஆனால், அவரை அப்படியெல்லாம் சும்மா விட மாட்டோம். அவருடைய தற்போதைய யூனிவர்ஸ் முடிந்துவிட்டால், இன்னொரு யூனிவர்சை கிரியேட் பண்ணி, அதில் பத்து படங்களை பண்ண சொல்லுவோம். அதுக்கப்புறம் இன்னொரு யூனிவர்ஸ் கிரியேட் பண்ணி, அதில் பத்து படங்களை பண்ண சொல்வோம். லோகேஷ் கனகராஜ் தற்போதைய தமிழ் சினிமாவிற்கு ரொம்ப முக்கியம் என கூறியுள்ளார்.
அதே போல் லோகேஷ் கனராஜ், ரஜினிகாந்த் இணையும் ‘தலைவர் 171’ படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப்படம் ஐகானிக் படமாக இருக்கும். ‘லியோ’ முடிந்த பிறகு இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்தப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட வேண்டும் என ரஜினி சார், லோகேஷ் கனகராஜ் ரெண்டு பேருமே விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
என்னது மூன்று பாகங்களா.?: ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த மாஸ் தகவலை பகிர்ந்த பிரபலம்.!