Triumph-Bajaj motorcycle – ட்ரையம்ப்-பஜாஜ் மோட்டார்சைக்கிள் எதிர்பார்ப்புகள் என்ன

லண்டனில் ஜூன் 27 அதாவது நாளைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ட்ரையம்ப்-பஜாஜ் கூட்டணியில் ஸ்கிராம்பளர் மற்றும் ரோட்ஸ்டெர் என இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி விலை அறிவிக்கப்படலாம்.

குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு, ஜாவா, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350, மற்றும் வரவிருக்கும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ட்ரையம்ப் பைக் வரவுள்ளது.

Triumph-Bajaj

என்ஜின் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை, என்றாலும் லிக்யூடு கூல்டு 400cc என்ஜின் பொருத்தப்பட்ட  இரு மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் 19-இன்ச் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற மல்டி-ஸ்போக் அலாய் வீல் பெற்று ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டயரை பெற்றுள்ளது. செமி-டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று அனலாக் டேகோமீட்டர் கொண்ட எல்சிடி யூனிட் ஆக இருக்கலாம்.

43 மிமீ யூஎஸ்டி முன்புற ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உடன் 320 மிமீ டிஸ்க் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பெற வாய்ப்புள்ளது.

பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் வரவுள்ள பைக் மாடல்கள் விற்பனைக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சத்துக்குள் விலை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.