இளையராஜா செய்யாததை ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு செய்தார்: வடிவேலு

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Vadivelu about AR Rahman: இசைஞானி இளையராஜா செய்யாததை ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு செய்ததாக வைகை புயல் வடிவேலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படம் ஜூன் 29ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனாலேயே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வடிவேலு புது விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.ஜி.பி. முத்து​படத்துல எனக்கு நல்ல கேரக்டர் குடுத்தாங்க​​வடிவேலு பாட்டு​மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் ராசாக் கண்ணு பாடலை பாடியிருக்கிறார் வடிவேலு. ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். மாமன்னன் இசை வெளியீட்டு விழா மேடையில் வடிவேலு அந்த பாடலை பாடியதை கேட்டு கமல் ஹாசன் கண் கலங்கினார். இந்நிலையில் ரஹ்மான் இசையில் பாடியது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் வடிவேலு.
​கட்டாயப்படுத்திய உதயநிதி​வடிவேலு கூறியதாவது, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட பயந்தேன். அதெல்லாம் முடியாது நீங்கள் கண்டிப்பாக பாடியே ஆக வேண்டும் என என்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார் உதயநிதி ஸ்டாலின். ஏ.ஆர். ரஹ்மான் என் அருகில் அமர்ந்து ஒவ்வொரு வரியாக சொல்லிக் கொடுத்து பாட வைத்தார். அதனால் தான் ராசாக் கண்ணு பாடல் வெற்றி பெற்றிருக்கிறது என்றார்.
​இளையராஜா​இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறார் வடிவேலு. எல்லாமே என் ராசா தான் படத்தில் வந்த எட்டணா இருந்தா பாடல் தான் வடிவேலு பாடிய முதல் பாடல் ஆகும். அந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியது குறித்து சொல்லுங்களேன் என வடிவேலுவிடம் கேட்கப்பட்டது.

​ஏ. ஆர். ரஹ்மான்​இசைஞானி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி வடிவேலு கூறியதாவது, எட்டணா இருந்தா பாடலை பாடியபோது இளையராஜா அங்கில்லை. அவரின் உதவியாளர்கள் தான் பாடலை ரெக்கார்டு செய்தார்கள். ஆனால் ரஹ்மான் அப்படி இல்லை. என் அருகிலேயே இருந்து சொல்லிக் கொடுத்து பாட வைத்தார். இளையராஜாவிடம் துவங்கிய என் இசை பயணம் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் வரை வந்திருக்கிறது. இதில் எனக்கு மகிழ்ச்சியே என்றார்.

​மாமன்னன் வடிவேலு​மாமன்னன் படத்தில் நான் சாதாரண மன்னன். வடிவேலு தான் மாமன்னன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். மாமன்னன் வடிவேலுவின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​Nayanthara:நயன்தாராவுக்கு கோடி, கோடியா கொட்டப் போகுது: சூப்பர் ஐடியா கொடுத்த விக்னேஷ் சிவன்

​அமைச்சர் உதயநிதி​மக்கள் பணி செய்ய வசதியாக மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் உதயநிதி ஸ்டாலின். அப்படியே மீண்டும் நடிக்க வந்தாலும் தன் கம்பேக் படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்குவார் என தெரிவித்துள்ளார். உதயநிதியை மாரி செல்வராஜ் அந்த அளவுக்கு கவர்ந்துவிட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​Kamal Haasan: அமைச்சரானதும் முதல் வேலையா கமலுக்கு நோ சொன்ன உதயநிதி ஸ்டாலின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.