ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘காஞ்சனா’. முனி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் சீரிஸ்களை தொடர்ச்சியாக இயக்கி வந்தார் லாரன்ஸ். அந்த வரிசையில் வெளியான படம் தான் காஞ்சனா. இந்தப்படத்தில் முக்கியமான கேர்கடரில் நடித்த நடிகை சமீபத்தில் யூடிப் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘முனி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘காஞ்சனா’ படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். ஹாரர் காமெடி படமாக வெளியான இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து காஞ்சனா இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை இயக்கி வெற்றி கண்டார் ராகவா லாரன்ஸ்.
‘காஞ்சனா’ படத்தில் திருநங்கைகள் படும் கஷ்டங்களை படமாக்கி பாராட்டுக்களை அள்ளினார் லாரன்ஸ். இந்தப்படத்தில் திருநங்கைகள் குறித்து சொல்லப்பட்ட கருத்து நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் அதுவரை ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த சரத்குமார் ‘காஞ்சனா’ படத்தில் திருநங்கையாக நடித்து ரசிகர்களை கலங்க வைத்திருந்தார்.
7ம் அறிவு படத்தில் ‘அந்த’ வசனத்தை தூக்க சொன்ன சூர்யா.. உதயநிதியால் வெளிவந்த உண்மை.!
இந்தப்படத்தில் சரத்குமாரின் மகளாக திருநங்கை பிரியா என்பவர் நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் திருநங்கை பிரியா தற்போது அளித்துள்ள யூடியூப் பேட்டி ஒன்றில், ‘காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்தப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக சாதரணமான திருநங்கை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். ஆனால், ‘காஞ்சனா’ படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால் இந்தப்படத்திற்கு பின்பாக எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. வேறு வேலை எதுவும் பார்க்கவும் முடியவில்லை. நம்மை ஏற்றிவிட சிலர் இருந்தாலும், கையை பிடித்து இழுத்து விடவும் சிலர் இருக்கிறார்கள் என கண்ணீர் மல்க அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் திருநங்கை பிரியா. அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
புது படங்களை ஓரம்கட்டிய ‘வேட்டையாடு விளையாடு’: ஆண்டவர் காட்டில் அடைமழை.!