எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்: தூசி தட்டப்படும் பழைய ஃபைல்கள் – ஸ்டாலின் கொடுத்த அழுத்தம்?

திமுகவுக்கு கடந்த இரு மாதங்களாக அடி மேல் அடி விழுந்து வருகிறது. பிடிஆர் சர்ச்சை ஆடியோ விவகாரம் மற்றும் அதன் தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை மாற்றம், பிடிஆரின் நிதித் துறையை மாற்றியதால் ஏற்பட்ட அதிருப்தி, செந்தில் பாலாஜி கைது என முதல்வராக பதவியேற்ற பின்னர் ஸ்டாலின் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருவது இப்போது தான்.

திமுக மீது எழும் விமர்சனங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்புகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது அடுக்கடுக்காக பல்வேறு ஊழல் புகார்களை கொடுத்தது திமுக. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறிவந்தனர். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் பல முறை சோதனை நடத்தியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

தங்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக அப்போது திமுக கூறிய போதும் இப்போது வரை கைது நடைபெறவில்லை. இதனால் அதிமுகவுக்கு இவை அனைத்தும் சாதகமாக அமைந்துள்ளன. எனவே அதிமுகவுக்கு செக் வைக்கும் விதமாக மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை முடுக்கிவிட திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணிகள் வேகமெடுத்து வருகிறதாம். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் எஸ்.பி.வேலுமணி தான் அடுத்த குறி என்கிறார்கள்.

அவரைத் தொடர்ந்து பி.தங்கமணி, காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள்.

அண்மை காலமாக சைலண்ட் மோடி இருந்த

மீண்டும் ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் பேசி வருவதால் கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கையும் வேகமாக முடிக்க உத்தரவுகள் பறந்துள்ளதாக சொல்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கியமான அதிமுக மாஜிக்கள் சிலரை லஞ்ச ஒழிப்புத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என கணக்கு போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.