கூட்டத்தில் சிக்கித் தவித்த தமன்னா

ஒரு காலத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து அமைதியான நடிகை என்று பெயர் எடுத்தவர் தமன்னா. தமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் அப்படியான படங்கள்தான். சமீபகாலமாக திடீரென படு கவர்ச்சிக்கு மாறிவிட்டார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'ஜி கர்தா' என்ற வெப் தொடரில் படுக்கை அறை காட்சியில் ஆபாசமாக நடித்து இருந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பணத்துக்காக இப்படி மோசமாக நடிக்கலாமா என்றும் கண்டித்தனர். அடுத்து அவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' என்ற வெப் தொடர் வெளியாக உள்ளது. இதில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதனால் தமன்னாவை பார்ப்பதற்கு அவர் செல்லும் இடங்களில் ரசிகர்கள் கூடுவது அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தமன்னா சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது திடீரென்று ரசிகர்கள் கூட்டம் தமன்னாவை சூழ்ந்து செல்பி எடுத்தனர். இதனால் கூட்டத்தில் தமன்னா சிக்கினார். அப்போது சிலர் அவரை தவறாக தொட்டனர். கையை பிடித்தும் இழுத்தனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா ரசிகர்களை பார்த்து கோபமாக கத்தினார். பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.