கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவல்: கலெக்டர் பிறப்பித்த அதிரடி உத்தரவு: பன்றி இறைச்சிக்கு தடை!

கொரோனா பாதிப்புக்கு தற்சமயம் முடிவு கட்டி அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு பற்றிய செய்தி கேரளாவில் இருந்து வருகிறது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் உதயகிரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு நாழலி பரம்பில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனியார் பண்ணைகளில் உள்ள பன்றிகளை அழிக்க கண்ணூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நான்கு பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் உடனடியாக கொன்று புதைக்கவும், பாதிப்பு பதிவான இடத்திற்கு வெளியே 10 கி.மீ சுற்றளவில் நோய் பரவுவதை கண்காணிக்கவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியர் எஸ்.சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.

என்ன பெரிய செந்தில் பாலாஜி.. எடப்பாடி பழனிசாமி தெரியுமா? அமைச்சரின் வீட்டிலேயே ஆளை தூக்கிய சம்பவம்!

இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலர் (பொறுப்பு) வி.பிரசாந்த், “டோனி மேத்யூ என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் நேற்று (ஜூன் 26) இந்நோய் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் ஆறு பண்ணைகள் உள்ளன. 93 பன்றிகள் அழிக்கப்பட்டு, அவை விதிமுறைப்படி அப்புறப்படுத்தப்படும்” என்றார்.

உதயகிரி கிராம பஞ்சாயத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்து மற்ற பண்ணைகளுக்கு கடந்த 2 மாதங்களுக்குள் பன்றிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து அவசர அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிற மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக பன்றிகள் கடத்தப்பட வாய்ப்புள்ளதால், மாவட்டத்தின் சோதனைச் சாவடிகள் மற்றும் பிற நுழைவுச் சாவடிகளில் காவல்துறை மற்றும் ஆர்டிஓவுடன் இணைந்து கடுமையான சோதனை நடத்த கால்நடை பராமரிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகள் விற்பனை செய்யப்பட்டதா என்றும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பன்றி இறைச்சி விற்பனைக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.