யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஆரம்பகர்த்தாவான டக்களஸ் தேவானந்தா தற்போது அதனை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளார்.
முதற்கட்டமாகவே இப் பேருந்து நிலையத்திற்கு வருகைத்தரும் தாய்மார்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தம் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதற்காக புதிய ஓய்வறை ( தாய்ப்பால் கூடம்) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் நாளொன்றுக்கு அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்பட்டுவரும் பேருந்து நிலையம் இதுவெனவும் இங்கு வசதிகள் குறைவாக உள்ளதால் மக்கள் அதிகம் அசௌகரியங்களை எதிர் நோக்குகிறார்கள் எனவும் அவற்றையும் களையும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் அபிவிருத்தி திட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு முக்கியத்துவம் வழங்கியே முதலில் இவ் ஓய்வறையை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.