வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 100 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் குட்எனப்,100 இவர் லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆவார். மொபைல் , கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். ஜெர்மனியில் பிறந்தாலும், அமெரிக்காவில் வசித்து வந்தார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். டெக்ஸாசில் வசிதது வந்திருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement