வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: பிரபல சீன தொழிலதிபர் ஜாக் மா நேபாளம் நாட்டிற்கு திடீரென வருகை தந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ‘ஜாக் மா, சீன அரசு வங்கி மற்றும் நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக கூறி, அபராதம் விதித்தது. 2020ல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் திடீரென காணாமல் போனார் ஜாக் மா. பின்னர் மீண்டும் 2021 ஜனவரியில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் தனி விமானம் மூலம் நோபளம் நாட்டிற்கு ஜாக் மா வருகை தந்துள்ளார். நேபாளம் பிரதமர் அழைப்பின் பேரில் வந்ததாக கூறப்படுகிறது. இது உறுதியாகவில்லை. 15 நாள் சுற்றுலா விசா பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் திடீர் வருகை குறித்து பல்வேறு கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement