மும்பை :சிவசேனா நிர்வாகி ராகுல் செவாலே தொடர்ந்த அவதுாறு வழக்கில், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அடுத்த மாதம் 14ல் ஆஜராகும்படி மும்பை நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சிவசேனா உத்தவ் பாலசாகேப் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே சார்பில், ‘சாம்னா’ என்ற பத்திரிகை நடத்தப்படுகிறது.
இது, இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை. இதன் முதன்மை ஆசிரியராக உத்தவ் தாக்கரேயும், நிர்வாக ஆசிரியராக சஞ்சய் ராவத்தும் உள்ளனர்.
இந்த பத்திரிகையில் சமீபத்தில் வெளியான கட்டுரையில், தன்னைப் பற்றி அவதுாறாக எழுதப்பட்டுள்ளதாகக் கூறி, சிவசேனா மூத்த நிர்வாகியும், முதல்வர் ஷிண்டேயின் ஆதரவாளருமான ராகுல் செவாலே சார்பில், மும்பை நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக அடுத்த மாதம் 14ல் நேரில் ஆஜராகும்படி உத்தவ் மற்றும் சஞ்சய் ராவத்துக்கு, நேற்று நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement