Kia Carens Recalled – மென்பொருள் கோளாறால் 30,297 கேரன்ஸ் கார்களை திரும்ப அழைக்கும் கியா மோட்டார்

கியா மோட்டார் நிறுவனத்தின் கேரன்ஸ் எம்பிவி காரில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் மென்பொருள் கோளாறினால் 30,297 எண்ணிக்கையில் செப்டம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட கார்களில் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் சிக்கலை தீர்த்து வைக்க திரும்ப அழைக்கப்படுகின்றது.

கேரன்ஸ் எம்பிவி காரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் சரியாக பூட் ஆகாத காரணத்தால், வெள்ளை ஸ்கீரின் போன்று காட்சியளிப்பதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தீரத்து வைக்க கியா ரீகால் செய்துள்ளது.

Kia Carens Recall

செப்டம்பர் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட கேரன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த எம்பிவிகளின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால், ஆய்வு மற்றும் மென்பொருள் புதுப்பிப்புக்காக சேவை மையத்திற்கு வருமாறு கேட்கப்படுவார்கள்.

மென்பொருள் புதுப்பிப்பு மேற்கொள்ள எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர்கள், இயற்கையாகவே 115hp மற்றும் 144Nm உற்பத்தி செய்யும் யூனிட், அத்துடன் 1.4-லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட் 140hp மற்றும் 242Nm ஆகியவற்றை வெளிப்படுத்தும். இதற்கிடையில், டீசல் எஞ்சின் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் யூனிட் ஆகும். இது 115hp மற்றும் 250Nm ஆகும்.

பெட்ரோல் எஞ்சினுடனான கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (1.4-லிட்டர் டர்போ-பெட்ரோலுக்கு மட்டும்) ஆகியவை அடங்கும். இதற்கிடையில், டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.