சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) பத்து படங்களோடு லோகேஷ் கனகராஜை விட்டுவிட மாட்டோம் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அளவில் இப்போது பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரத்தில் தொடங்கி விக்ரம்வரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட்டானதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பிற மொழி நடிகர்களும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.
லோகேஷின் லியோ: விஜய்யை வைத்து இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் இன்னும் முடியாதபோது படத்தின் பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் இப்போது திருப்பதியில் நடந்துவருகிறது.
கைதி 2: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒன்று கைதி படத்தின் இரண்டாம் பாகம். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டாகியுள்ளதால் அதன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது. கார்த்தியும் அந்தப் படத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். இருப்பினும் கைதி 2வை ஆரம்பிப்பதற்கு முன்னதாக லோகேஷ் வேறு ப்ளானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி -லோகேஷ் கூட்டணி: விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகே ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஏதோ காரணத்தால் அப்போது அது நடக்காமல் போனது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் 171ஆவது படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் கமிட்டாகியிருக்கிறார். அதுதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் தகவல் ஒன்று உலாவுகிறது. எனவே ரஜினியுடனான படத்தை முடித்துவிட்டு கைதி 2வை அவர் இயக்கலாம் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படத்தையும் அவர் இயக்குவார் என பேசப்படுகிறது.
பத்து படங்கள்தான்: இப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சூர்யா என போட்டிப்போட்டுக்கொண்டு இருக்க லோகேஷோ பத்து படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என சமீபத்திய பேட்டியில் ஓபனாக கூறினார். அவரது இந்தப் பேட்டி பலரையும் அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது.
மேலும், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை நம்பி மட்டுமே இருக்கிறார். அதைத் தாண்டி அவரால் கதை யோசிக்க முடியவில்லை. எனவே அந்த சரக்கு தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில்தான் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் சிலர் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
அப்படியெல்லாம் விடமாட்டோம்: இந்நிலையி பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்த பேட்டி ஒன்றில், “10 படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிடுவேன் என சொல்வதற்கு பெரிய போல்ட் வேண்டும். ஆனால் லோகேஷை அப்படியெல்லாம் விட்டுவிடமாட்டோம். அவரின் இப்போதைய யுனிவெர்ஸ் முடிந்தால் இன்னொரு யுனிவெர்ஸை க்ரியேட் பண்ண சொல்வோம். அதில் பத்து படங்கள் செய்யுங்கள் என்போம். அவர் தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை.
ரஜினி படம் உறுதி: ரஜினியும், லோகேஷும் இணைவது உறுதியாகிவிட்டது. இதை பெரிய ஐகானிக் படமாக மாற்ற வேண்டும் என ரஜினி உறுதியாக இருக்கிறார். லியோ முடிந்த பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வரும்.ஆனால் இதில் யஷ் நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை. படத்தை பிரமாண்டமாக வெளியிட வேண்டும் என்பதில் ரஜினி, லோகேஷ் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள்” என்றார்.