அதர்வா புதிய படத்தின் அப்டேட்
நடிகர் அதர்வா நடித்து கடசியாக வெளிவந்த குருதி ஆட்டம், பட்டத்து அரசன் ஆகிய திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது நிறங்கள் மூன்று, தணல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஒரு புதிய படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.