அரசு பள்ளி ஆசிரியராக சூப்பர் வாய்ப்பு… எந்த மாநிலமா இருந்தாலும் ஓகே தான்… பிகார் அரசு சர்ப்ரைஸ்!

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவருக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன்மூலம் சொந்த மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் மூலம் வேறு மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் பிகார் மாநில அரசு பெரிதும் கவனம் ஈர்க்கும் சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

பிகார் அரசு அதிரடிஅதாவது, பிகாரில் மட்டுமே வசிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அளிக்கப்படும் குடியிருப்பு சான்றை தூக்கி ஓரம் வைத்துள்ளது. அதன்படி, இந்தியாவின் எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் சரி. பிகார் மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியராக விண்ணப்பிக்கலாம். இதற்கேற்ப பிகார் மாநில பள்ளி ஆசிரியர்கள் (பணி நியமனம், பணியிடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, சேவை கட்டுப்படுகள்) விதிமுறைகள் 2023 திருத்தப்பட்டுள்ளது.​அரசு பள்ளி ஆசிரியராக வாய்ப்புஇதற்கான ஒப்புதலை முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பிகார் மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியராக விண்ணப்பம் செய்வோர், அதே மாநிலத்தில் வசிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அரசு ஊழியர்களுக்கு இணையாக பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இருக்கும் என்றும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.​ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புஇதுதவிர 8 மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 370 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பிகார் அரசின் முடிவிற்கு அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்திருத்தம் வரப் போகிறது என்று தெரிந்த உடனே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.
எதற்காக இந்த ஏற்பாடு?தற்போது அமலுக்கே வந்துவிட்டது. இந்நிலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பிகார் மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எதற்காக பிகாருக்கு வெளியில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு, திறமை வாய்ந்த பிற மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.​ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புகணக்கு, அறிவியல், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடப் பிரிவுகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இதனால் அவை காலியாகவே கிடக்கின்றன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்ப்பு என்பது பல சமயங்களில் வரத் தான் செய்யும். அதற்கெல்லாம் என்ன செய்வது? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன சட்டத் திருத்தத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.