களனிவெளி புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளது என்று ரயில்வே மேலதிக பொதுமுகாமையாளர் (செயல்பாட்டு) இன்று (28) தெரிவித்தார்.
அதற்கமைய களனிவெளி ரயில்வே போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் இன்று பி.ப 2.00 மணி முதல் வழமைபோன்று செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாலை நேரத்தில் இயங்கும் அலுவலக ரயில்களும் வழமை போன்று செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று மாலை கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம வரை புறப்பட்ட ரயில் பொரல்லை கொட்டா வீதிக்கு அருகாமையில் உள்ள புகையிரத நிலையத்தை அண்மிக்கும்போதே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.