வருகின்ற ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் பிரகாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்