ஜூன் 30ல் ‛கேப்டன் மில்லர்' முதல் பார்வை
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக குற்றாலம், மதுரை, புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் (முதல் பார்வை) பர்ஸ்ட் லுக் விரைவில் என்று பதிவிட்டுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை வருகின்ற ஜூன் 30ம் தேதி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.