சென்னை: நடிகை தீபா வெங்கட் வெறித்தனமான ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் நடித்த பாசமலர்கள் படத்தின் மூலம் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் தீபா வெங்கட், அதன் பிறகு அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்தார்.
பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீபா வெங்கட், தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடிகையாக வலம் வந்தார்.
நடிகை தீபா வெங்கட்: நடிகை, தொகுப்பாளினி, ஆர்.ஜே,டப்பிங் கலைஞர் என பல திறமைகளை கொண்ட தீபாவெங்கட், 96ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இப்படிக்கு தென்றல் என்ற சீரியல் தான் தீபாவிற்கு முதல் தொலைக்காட்சி என்ட்ரியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல சீரியல்களில் நடித்து வந்தார்.
ஏராளமான சீரியல்களில்: ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதில் விஜி என்ற பாசிட்டிவான பெண்ணாக நடித்திருந்தார். பின்னர் கோபுரம், அண்ணாமலை, ரோஜா, கோலங்கள் என 2010ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 80 சீரியல்களில் தீபா வெங்கட் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங்: 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தீபா, சினிமாவிலும் சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் ரேடியோவில், ஆர்ஜேவாக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்திருந்தார். அவரது குரல் ஐஸ்வர்யா ராய்க்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஹீரோயின்களுக்கு தான் இவர் டப்பிங் பேசி இருக்கிறார்.
ஜோதிகா மேடம் கொஞ்சம் ஓரம் போங்க: பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் பிரபலமான தீபா வெங்கட் தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இதனை பார்த்த இணையவாசிகள் 48 வயதிலும் இப்படியா..? என்றும் ஜோதிகா மேடம் கொஞ்சம் ஓரம் போங்க என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.