சென்னை: ‘தத்கால்’ திட்டத்தின்கீழ், விவசாய மின்இணைப்பு வழங்குவதற்கான, விண்ணப்பங்களை பெறும் பணியை மின்வாரியம் தொடங்கி உள்ளது.
இத்திட்டத்தில் 5 குதிரைத் திறன் வரையிலான இணைப்புக்கு ரூ.2.50 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும். 5 முதல் 7.50குதிரைத் திறன் வரை ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறன் வரை ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், இணைப்புபெற மின்வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே விண்ணப்பித்த விவசாயிகள் தத்கால் திட்டத்துக்கு மாற விரும்பினால் செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடிதம் பெற வேண்டும்.
முழு கட்டணம் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.