பங்குச் சந்தை என்பது கடினமான, சரியாக கணித்து சொல்ல முடியாத ஒன்றாக கருதப்பட்டாலும், இன்றளவிலும் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிபுணர்கள் பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்து, சில பங்குகளை வாங்கலாம், வைத்திருக்கலாம் (Hold), விற்பனை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.
அந்த வகையில், மார்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனம் இணைய வர்த்தகம் தொடர்பான பங்குகளைப் பரிந்துரை செய்துள்ளது. அவை என்னென்ன பங்குகள், ஏன் அந்தப் பங்குகளை பரிந்துரை செய்துள்ளது, இலக்கு விலை என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
நிதித்துறையை சேர்ந்த பிபி ஃபின்டெக் (PB Fintech) , பேஷன் துறையை சார்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான நைகா (Nykaa), ஜொமோட்டோ (Zomoto) உள்ளிட்ட பங்குகளைப் பரிந்துரை செய்துள்ளது. இளைய தலைமுறை சார்ந்த நிறுவனங்களான இவை, தங்கள் வணிகத்தில் பெரும்பகுதி ஆன்லைன் வணிகத்தை நம்பியே உள்ளன. மேற்கண்ட நிறுவனங்கள் 2024-ம் நிதியாண்டின் பிற்பாதியில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
இனிவரும் காலத்தில் ஆன்லைன் மூலமான விற்பனை என்பது மிகவும் அதிகரிக்க வாய்ப்புண்டு. இது இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாகதாக அமையும். இது மேற்கண்ட பங்குகளின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் இருக்கலாம் எனக் கணித்துள்ளது.
பிபி ஃபின்டெக், நைகா, ஜொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனாவுக்கு முன்பே வலுவான வளர்ச்சியைக் காண ஆரம்பித்த நிறுவனங்கள் ஆகும். இந்தப் போக்கானது நிதி ஆண்டு 2023-ஆம் ஆண்டு முதல் 2027 -ஆம் ஆண்டு வரையிலும் தொடரலாம். மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சற்று மேம்படலாம் என்றும் மார்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் சமீபத்தில் கூறியுள்ளது.
பிபி ஃபின்டெக் இன்ஷுரன்ஸ் மற்றும் நிதித் துறை சம்பந்தமான பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
ஃபேஷன் மற்றும் அழகு துறையை சார்ந்த நைகா நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பர்சனல் கேர் உள்ளிட்ட பல்வேறு அழகு சார்ந்த பொருள்கள், பேஷன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இது ஆஃப்லைனில் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டாலும், இதன் முக்கியமான வணிக நடவடிக்கையானது ஆன்லைனில்தான் செய்து வருகிறது.
ஜொமோட்டோவைப் பொறுத்தவரை, ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாகும். வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களான இவற்றின் வளர்ச்சி, இனிவரும் காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என இந்தத் தரகு நிறுவனம் கருதுகிறது.
ஆக, இந்த பங்குகளை உங்கள் பங்கு போர்ட்யோவில் வைத்துக் கொள்ள நீங்கள் பரிசீலிக்கலாம்.
மேற்கண்ட பங்குகளில் ஜொமோட்டோ சற்று விலை அதிகமாக தோன்றினாலும், அதன் வளர்ச்சிக்கான அறிகுறி வலுவாக காணப்படுவதால், விலை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. அந்தளவுக்கு ஜொமோட்டோ நிறுவனம் திறனை கொண்டுள்ளது.
ஜொமோட்டோவில் மட்டுமல்ல, பிபி ஃபின்டெக் நிறுவனத்திலும் எபிடா மார்ஜின் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிபி ஃபின்டெக், ஜொமோட்டோ, நைகா, மேக் மை ட்ரிப் மற்றும் டெலிவரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஓவர்வெயிட் (Overweight) என்ற ரேட்டிங்கினையே தொடர்ந்து கொண்டுள்ளது. இதே பேடிஎம் பங்கிற்கு ஈக்வல் வெயிட் (Equal weight) என கொண்டுள்ளது.
பொதுவாக, சமீபத்திய ஆண்டுகளாக இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கணிசமாக உள்ளது. மக்களின் ஈடுபாடும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது நீண்ட கால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புண்டு!
Disclaimer: பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின், நீங்கள் முதலீடு நடவடிக்கை எடுப்பது அவசியம்!