புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, கல்முனை நிதாஉல் பிர் அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் மிக குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் இன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும்இ நிதாஉல் பிர் அமைப்பின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் இஸட்.எம்.அமீன் அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம்இ திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் நிதா உல் பிர் அமைப்பின் முக்கியஸ்தருமான ஏ.பி.எம்.அஸ்ஹர்இ சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்