புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரதீப் பட்டாச்சார்யா, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ராய், குஜராத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தினேஷ் ஜெமால்பாய் அனவாடியா, லோகன்ட்வாலா ஜுகல் சிங் மாதுர்ஜி, கோவாவில் வினய் டெண்டுல்கர் ஆகிய 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 13-ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. லுசினோ ஃபலேரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த இடத்துக்கு இடைத்தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.