மூளையில்லாதவர்கள் என நினைத்தீர்களா.?: 'ஆதிபுருஷ்' படத்தை கிழித்து தொங்கவிட்ட நீதிமன்றம்.!

அண்மையில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. பான் இந்திய அளவில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்தப்படத்தின் மோசமான கிராபிக்ஸ் காட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பான் படமாக ரிலீசான படங்கள் எதுவும் பெரிதான வெற்றியை பெறவில்லை. இதனால் ‘ஆதிபுருஷ்’ படத்தை பெரிதும் நம்பினார் பிரபாஸ். அண்மையில் ரிலீசான இந்தப்படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவானது. ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ‘ஆதிபுருஷ்’ படம் அண்மையில் வெளியானது. 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ஓம் ராவத் இயக்கியிருந்த இந்தப்படத்தின் டீசரே பலவித சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து படக்குழுவினர் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்துபதற்காக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தப்படத்தின் அனிமேஷன் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்திற்கு தடைவிதிக்க கோரியும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையில் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Tamannaah: ஏர்போர்ட்டில் வைத்து ரசிகர் செய்த காரியம்: பதறி போன நடிகை தமன்னா.!

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். ‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. படத்தை பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சரியம். அனுமனும், சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மக்களை மூளையற்றவர்கள் என நினைக்கிறீர்களா.? என சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இம்மாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் உள்ளது. இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். தணிக்கை வாரியம் முறையாக சென்சார் செய்ய தவறியது ஏன்? ஒருவேளை இந்தப்படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜாராகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்தக்காட்சிக்கு பிறகு டெட்டால் மூலம் வாயை சுத்தம் செய்தேன்: ‘லஸ்ட் ஸ்டோரி 2’ பட நடிகை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.