வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகர்தாலா: திரிபுராவில் ஜெகன்னாத் ரத யாத்திரையின் போது மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் 7 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்காட் என்ற பகுதியில் ஜெகன்னாதர் ரத யாத்திரை எனப்படும் தேரோட்டம் இன்று(28-ம் தேதி) மாலை 4:30 மணிக்கு துவங்கியது. திரளான பக்தர்கள் கூடியிருந்து தேரோட்டத்தை தரிசித்து கொண்டிருந்தனர். அப்போது தேர் செல்லும் பாதையில் உயர்அழுத்த மின் கோபுரம் வயர் மீது தேர் மேற்கூரை உரசியதில் தீ பிடித்தது.
இதில் மின்சாரம் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 18 காயமடைந்தனர். தேர் அருகில் நின்றிருந்த பலர் அங்கிருந்த ஒட்டம் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு திரிபுரா முதல்வர் மாணிக்க சாஹா இரங்கல் தெரிவித்து்ளளார். நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement