வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெஷாவர்: பாகிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துன்கவாஹ் மாகாணம் , மாலாகண்ட் மாவட்டத்தில் பாட்கேல்ஹா என்ற கிராமத்தில் திருமண வீட்டில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆத்திரமடைந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பெண்கள், 6 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாயினர்.
துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடிவிட்டார். மாகாண முதல்வர் முகமது அசம்கான், உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து அறிக்கை தர போலீசாருக்கு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement