ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Devadarshini Chetan daughter: தேவதர்ஷினி, சேத்தன் தம்பதியின் செல்ல மகள் நியதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தால் அவர் ஹீரோயினாக ரெடியாகிவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.
96 படம்தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் தேவதர்ஷினி. அவர் நடிகர் சேத்தனுடன் சேர்ந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு நியதி என்கிற மகள் இருக்கிறார். அச்சு அசலாக அம்மா மாதிரியே இருக்கிறார் நியதி. அவர் பிரேம் குமாரின் 96 படத்தில் நடித்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.பாக்யராஜ்”என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!சுபஸ்ரீயாக நடித்த நியதிவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் ராமின் பள்ளித் தோழி சுபஸ்ரீயாக நடித்திருந்தார் நியதி. பள்ளி காலத்து சுபாவாக நியதியும், வளர்ந்த சுபாவாக தேவதர்ஷினியும் நடித்திருந்தார்கள். நியதியை பெரிய திரையில் பார்த்தவர்களோ தேவதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறார் என நம்பவே முடியவில்லை என வியந்து பேசினார்கள்.
பிகில் வாய்ப்பு96 பட்திற்கு பிறகு நியதியை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிக்க நியதிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பள்ளி தேர்வு இருந்ததால் அது தான் முக்கியம் என பிகில் பட வாய்ப்பை ஏற்க மறுத்தார். இந்நிலையில் மலையாளத்தில் ராணி என்கிற படத்தில் நடித்து வருகிறார் நியதி. அடுத்ததாக அவர் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
அழகிய நியதி96 படத்தில் இருந்த நியதி தற்போது இல்லை. அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை அம்மா தேவதர்ஷினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். லைட்டாக வெயிட் குறைந்து ஸ்லிம்மாக சிம்பிள் அழகியாக இருக்கிறார் நியதி. அதை பார்த்தவர்களோ, தேவதர்ஷினி வீட்டில் இருந்து ஒரு ஹீரோயின் ரெடி. இந்த புகைப்படங்கள் நிச்சயம் இயக்குநர்களின் கண்களில் பட்டிருக்கும். விரைவில் அவர் ஹீரோயினாகிவிடுவார் என்கிறார்கள்.
லட்சுமி மேனன்பார்க்க பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருக்கிறார் நியதி. கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கூட்டி வைத்திருந்தார் லட்சுமி மேனன். அவர் இடத்தை நியதி பிடிப்பார் என நம்பப்படுகிறது. நியதி சேத்தன் ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்புக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Ajith: வெயிட்டை குறைச்சு செம ஃபிட்டா, ஸ்டைலா மாறிய அஜித்: இது தான் விடாமுயற்சி
தேவதர்ஷினிLeo: ஆட்டம் கண்ட லியோ படக்கழு, இன்னும் தொடரும்: ராஜேஸ்வரி பிரியாநியதியை வைத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் தேவர்தர்ஷினி. அப்படி என்றால் நியதி தன் அம்மா வழியில் முழு நேர நடிகையாகப் போகிறார் என்பது புரிகிறது. நியதியை பெரியதிரையில் நடிக்கவிடுங்கள். சின்னத்திரைக்கு செல்ல இன்னும் காலம் இருக்கிறது. ஹீரோயினாக ஒரு பெரிய ரவுண்டு வரும் தகுதி நியதிக்கு இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் தேவதர்ஷினி என்கிறார்கள் ரசிகர்கள்.
வழிகாட்டிஉங்களுக்கு வழி காட்ட ஆள் இருந்தார்களா என தெரியவில்லை. ஆனால் பெரியதிரையில் நியதிக்கு வழிகாட்ட நீங்களும், சேத்தனும் இருக்கிறீர்கள். அது போதும் அவருக்கு. அதனால் அவரை ஹீரோயினாக்கிவிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியதிக்கு அப்பா, அம்மாவாக சேத்தனும், தேவதர்ஷினியும் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Maamannan:மாமன்னன் கதை இது தானா?: உதயநிதி ஸ்டாலின் சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது