In inflation hit UK, hunger could become new normal, study shows | பட்டினியால் பரிதவிக்கும் பிரிட்டன்: 14% மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: பிரிட்டனில் தற்போது பட்டினி பிரச்னை தலைதூக்கியுள்ளது. அங்கு பட்டினி பிரச்னை தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் உணவு பெறுவதில் மக்களளிடையே சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதை சரிசெய்ய தொண்டு அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இது நீண்ட கால தீர்வு அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன் 100 உணவு வங்கிகள் மட்டுமே சேவை செய்து வந்தன. ஆனால் 2021ல் இந்த எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்தது.

latest tamil news

2022 செப்டம்பர் புள்ளிவிவரங்களின்படி 97 லட்சம் மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர், உணவுக்காக தொண்டு அமைப்புகளையே சார்ந்து இருக்கின்றனர். பிரிட்டனில் கடந்த மாதம் பணவீக்கம் 8.7 சதவீதமாக உயர்ந்த நிலையில், உணவுப் பொருட்களின் விலை 18 சதவீதம் உயர்வை கண்டது. இதனால் பெரும்பாலான பிரிட்டன் மக்கள் வழக்கத்தை விட குறைவான அளவே உணவு பொருட்களை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.