சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் ஜிகிர்தண்டா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
காஞ்சனா சீரிஸ் படங்களின்மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் ருத்ரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் அவர் தற்பேோது சந்திரமுகி 2 மற்றும் ஜிகிர்தண்டா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜிகிர்தண்டா 2 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இன்றுடன் படப்பிடிப்பை நிறைவு செய்யும் ஜிகர்தண்டா 2 படம்: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ருத்ரன் படம் அவருக்கு ஹீரோவாக சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியா பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து சந்திரமுகி 2 மற்றும் ஜிகிர்தண்டா 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகிர்தண்டா 2 படம் மற்றும் அதன் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது ஜிகிர்தண்டா படம். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்சுடன் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியானது.
தீபாவளி ரிலீசாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த அறிவிப்புடன் வெளியான டீசரும் வித்தியாசமான வகையில் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்களில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் கையில் துப்பாக்கிகளுடன் காணப்பட்டனர். இந்த போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது ஜிகிர்தண்டா Double X. இந்தப் படம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், படம் ஜிகிர்தண்டா படத்தின் முன்கதையாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜிகிர்தண்டா படம் கார்த்திக் சுப்புராஜிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், தற்போது உருவாகிவரும் இரண்டாவது பாகமும் அவருக்கு நல்லமுறையில் கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகின்றன. கேரளாவில் கடந்த ஷெட்யூலை நடத்தி முடித்த படக்குழு தற்போது சென்னையில் சூட்டிங் நடத்தி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட உள்ளன. இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பாக படத்தின் விஷுவல்கள் மிரட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. முந்தைய பாகம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பை இந்தப் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.