Kichcha 46: `கிளிம்ஸ் வெளியானதும் நிறைய பேசலாம்!'- கிச்சா சுதீப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தைத் தயாரித்துவரும் கலைப்புலி எஸ். தாணு, அடுத்து கிச்சா சுதீப்புடன் கைகோத்திருக்கிறார். இது சுதீப்பின் 46-வது படமாகும். அதன், கிளிம்ஸ் வீடியோ வருகிற ஜூலை 2-ம் தேதி அன்று காலை 11.46 மணிக்கு வெளியாகிறது. என தாணுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

போஸ்டரில்…

கன்னடத்தில் அறிமுகமாகி, அங்கே பக்கா கமர்ஷியல் கதாநாயகனாக அசத்திவருபவர் கிச்சா சுதீப். ராஜமௌலியின் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் அவர். அதன்பின் ‘பாகுபலி’, விஜய்யின் ‘புலி’ படங்களில் நடித்தார். சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தைக் கன்னடத்தில் இயக்கி நடித்ததன் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அதன் பின் சில படங்களை இயக்கினார். அங்கே தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டிவருகிறார்.

சமீபத்தில் சுதீப்பின் 45-வது படமான ‘விக்ராந்த் ரோணா’ பல மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அவர் உபேந்திராவுடன் நடித்த ‘கப்ஸா’ தமிழிலும் வெளியானது. இந்நிலையில், அவரது 46-வது படத்தை தாணு தயாரித்து வருகிறார். அதன் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஜூலை 2-ம் தேதி அன்று காலை 11.46 மணிக்கு வெளிவரும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து தாணுவிடம் பேசினேன்.

தாணு

”சுதீப் சார் படம் நல்ல கதையம்சம் கொண்ட படம். தமிழ், கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்ல படம் ரெடியாகுது. படத்தின் ஷூட்டிங் சென்னையில்தான் நடந்திட்டிருக்கு. இந்தப் படத்தைக் கன்னட இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்குகிறார். இப்போதைக்கு இவ்ளோ தகவல்கள் போதுமென நினைக்கிறேன். வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சுதீப் சார் எப்படி வந்தார், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து கிளிம்ஸ் வீடியோ வெளியான பிறகு பேசினால்தான் படத்தைப் பற்றி நிறைய பகிர்ந்துக்க முடியும்” என்கிறார் தாணு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.