ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் வரும் நா ரெடி பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது.
“என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!
அந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய். அவருடன் சேர்ந்து அனிருத்தும், பிக் பாஸ் பிரபலம் அசல் கோலாரும் பாடியிருந்தார்கள். இந்நிலையில் நா ரெடி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நா ரெடி பாடலுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனரும், தலைவருமான ராஜேஸ்வரி பிரியா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது,
இது பொறுக்கித்தனமான பாட்டு. இது ஒரு பாடலா?. இது மாதிரியான கீழ்த்தரமான வரிகளை பாட விஜய் அவர்களுக்கு எப்படி மனசு வந்துச்சு. இதன் மூலம் ஒரு இளைஞனோ, பள்ளி மாணவனோ வீணாப் போனா விஜய் பொறுப்பேற்பாரா?. நீங்கள் நல்லா கல்லாகட்டிட்டு போயிடுவீங்க. கோடிக்கணக்கில் வாங்கிட்டுப் போயிடுவீங்க. ஆனால் இங்கே சமூகம் சீரழிகிறது.
மாணவர்களை சந்தித்தீர்களே. அந்த அரங்கில் இந்த பாடலை பதிவிட முடியுமா?. சிகரெட் (Tobacco Lobby) நிறுவனங்களின் விளம்பர தூதராகவே நடிகர் விஜய் உள்ளார்.
ரசிகர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் என்பதனை மறந்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் இருப்பது சரியா?. குழந்தைகளையும் பாதிக்கும் இந்த காட்சி. திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள் என்றார்.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!
கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.
வெற்றி நமதே!!!
இன்னும் தொடரும்……என தெரிவித்துள்ளார்.
நா ரெடி பாடல் தொடர்பாக விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் புகார் அளித்தார். நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985, போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Vijay: ரவுடியிசம், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு இளைஞர்களை தூண்டுகிறார்: விஜய் மீது போலீசில் புகார்
இந்நிலையில் ராஜேஸ்வரி பிரியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தனை எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள நா ரெடி பாடல் வரிகள் இது தான்.
அண்ணன் நான் வரவா நான் ரெடியா இருக்கேன் தனியா வரவா என்ற பாடலில்
ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க
பொகயல அறுவடைக்கு தயாரான ஆப்பொனன்ட் அ களையெடுத்து தலவலிய போக்கிப்பது எங்க தலை எழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணில கட்டி லாரி ல ஏத்தி அர்த்துபோட அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு
டேய் எல்லா புளு பிரின்ட் உம் தெரியும் மிஷன் சக்சஸ் ஃபுல் ஆ முடியும் இடையே வந்த உனையும் படையல்
வெப்பேன் கொலசாமிக்கு
அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு கேங்ல இல்ல பொய் புரட்டு வெளயாட போல
வேல நடத்தும் வேள்டு வைடு லிங்க்
ஏய் எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாகுதுடா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாரி சிங்க்
சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட கெலிச்சி கெலிச்சி களச்சி போய்ட்டேன் பத்தவச்சு பொகய உட்டா பவர்
கிக் இன்
பொகயல பொகயல பவர் கிக் இன்
மிளக தட்டி முட்டி குழம்புல கொத்திக்குது பார் அந்த கால் அழகு அடி தடி வெட்டு குத்து எங்க வீட்டு சமையல் வர அட கலந்திருக்கு
கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு
Vijay:விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்கலாம், ஆனால்…: உதயநிதி ஸ்டாலின்
இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச்சு எனக்கு புரிதா உனக்கு
மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் டா மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பார்
ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு போஸ்டர் அடி அண்ணன் ரெடி கொண்டாடி கொளுத்தணும் டி