Maamannan Review: தியேட்டர் அதிரப் போகுது: மாமன்னன் படம் பார்த்த தனுஷ் சூப்பர் விமர்சனம்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Dhanush about Maamannan: உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தனுஷ் கொடுத்திருக்கும் விமர்சனமே மாமன்னனுக்கு பெரிய பலம்.

​தனுஷ் விமர்சனம்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் மாமன்னன் படம் பார்த்த தனுஷ் அது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு எமோஷன். மாரி உங்களுக்கு பெரிய ஹக். வடிவேலு சார், உதயநிதி ஸ்டாலின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஃபஹத், கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருக்கிறார்கள். இடைவேளையின்போது தியேட்டரே அதிரப் போகிறது. ஏ.ஆர். ரஹ்மான் சாரின் இசை அழகு என தெரிவித்துள்ளார்.விமர்சனம்​​​மாமன்னன்​தனுஷின் விமர்சனம் தவிர்த்து மாமன்னன் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் தெரியுமா?. இது தான் அமைச்சர் உதயநிதி நடிப்பில் வெளியாகும் கடைசி படமாகும். மக்கள் பணி செய்யவே நேரம் இல்லை என்று நடிப்புக்கு முழுக்கு போடுகிறார். அதனால் உதயநிதி நடிப்பில் வெளியாகும் கடைசி படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும்.

​Maamannan:மாமன்னன் கதை இது தானா?: உதயநிதி ஸ்டாலின் சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது

பாக்யராஜ்​”என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!​​மாரி செல்வராஜ் படம்​பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் மாமன்னன். இதில் தன் அரசியலை பற்றி பேசியிருக்கிறார். உதயநிதி படம் மூலம் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் அவர் என்ன பிரச்சனை பற்றி சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்க தியேட்டருக்கு செல்லலாம்.

​96 பட ஸ்கூல் பாப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க: லட்சுமி மேனன் இடத்தை பிடிப்பாரோ?

​ஏ.ஆர். ரஹ்மான் இசை​மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜுடன் ஏ.ஆர். ரஹ்மான் வேலை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். தன் ஸ்டைலில் இருந்து மாறி வந்து மாரி செல்வராஜின் சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார். மாமன்னன் பட பிஜிஎம் ரஹ்மானின் பிற படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​சென்னையில் நடிகருடன் டாப் நடிகைக்கு ரகசிய திருமணம்: குடிபோதையில் வந்து திருமணத்தை நிறுத்திய சீனியர் நடிகர்

​வடிவேலு​மாமன்னன் படத்தில் நடிப்புக்கு பெயர் போன வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அந்த படத்தில் நடித்திருப்பதுடன் ராசாக் கண்ணு பாடலை பாடவும் செய்திருக்கிறார் வடிவேலு. ஃபஹத் ஃபாசிலின் வில்லத்தனத்தை பார்த்து கோலிவுட் ரசிகர்கள் ஏற்கனவே மிரண்டு போயிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் மிரட்டப் போகிறார். கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் எத்தகையது என்பதை மாரி செல்வராஜ் ரகசியமாக வைத்திருக்கிறார்.

​Vijay:விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்கலாம், ஆனால்…: உதயநிதி ஸ்டாலின்

​உண்மை சம்பவம்​உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மாமன்னன். எந்த சம்பவத்தை படமாக்கியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள கண்டிப்பாக தியேட்டருக்கு போக வேண்டும். மாரி செல்வராஜ் படம் ரிலீஸானால் உடனே சமூக வலைதளங்களில் விவாதம் எழும். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
​அரசியல்வாதியின் மகன்​மாமன்னன் படத்தில் அரசியல்வாதியின் மகனாக நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின் படத்திலும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இது உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பற்றிய படம் அல்ல. இதை அவரே சொல்லியிருக்கிறார். ஒரு அமைச்சர் இன்னொருவரின் அரசியலை ஏற்று நடித்திருப்பதாலும் படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.
​கண்டிப்பாக பார்க்கணும்​நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் நான் மீண்டும் நடிக்க வந்தால் அந்த படத்தை கண்டிப்பபாக மாரி செல்வராஜ் தான் இயக்குவார் என கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவரை அப்படி சொல்லும் அளவுக்கு மாமன்னனில் என்ன செய்திருக்கிறார் மாரி செல்வராஜ் என்பதை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அதற்காகவும் கண்டிப்பாக தியேட்டருக்கு செல்ல வேண்டும். பக்ரித் பண்டிகை நாளில் மாமன்னன் வருவதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அதை மனதில் வைத்து தான் படத்தை ஜூன் 29ம் தேதி வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.