Mari Selvaraj: வடிவேலு டபுள் மீனிங் காமெடியெல்லாம் மாரி செல்வராஜ் பார்த்தது இல்லையோ.. செம கலாய்!

சென்னை: பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களில் யோகி பாபுவை நடிக்க வைத்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் வடிவேலுவை டைட்டில் ரோலிலேயே நடிக்க வைத்துள்ளார்.

வடிவேலு தேவர் மகன் படத்தில் நடித்த இசக்கி கதாபாத்திரத்தின் பாதிப்பில் தான் மாமன்னன் படமே உருவாக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், வடிவேலுவை காமெடி காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டவர் போல சித்தரிக்க அதை பார்த்து நாம் சிரிப்பது ஏன் என்கிற கேள்வியை சமீபத்திய பேட்டியில் மாரி செல்வராஜ் எழுப்பி உள்ளார்.

மாமன்னன் படத்தில் அதே வடிவேலு தான்.. ஆனால், மக்களின் ரியாக்‌ஷனை மாற்றி படமாக்கி இருக்கேன் எனக் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

கமெடியை கூடவா இப்படி பார்ப்பாரு: இயக்குநர் மாரி செல்வராஜ் யூடியூப் சேனல்களுக்கு மாமன்னன் படத்தை ப்ரோமோஷன் செய்யும் விதமாக கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் அவரையே ட்ரோல் செய்யும் மெட்டீரியலாக மாறி வருகின்றன.

வடிவேலுவின் காமெடி காட்சிகளை பார்த்து பலரும் சிரித்து வந்த நிலையில், அந்த காமெடி காட்சிகளையும் வேறொரு கோணத்தில் பார்த்து, அந்த கதாபாத்திரம் எப்படி கஷ்டப்படும், அது என் அப்பாவா இருந்தா எப்படி இருக்கும் என்பதை யோசித்துத் தான் மாமன்னன் படத்தை உருவாக்கி இருப்பதாக மாரி செல்வராஜ் பேசி உள்ளார்.

கஷ்டத்தை பார்த்து சிரிக்கிறோம்: வடிவேலு சாரோட எல்லா படங்களிலும் வரும் காமெடி காட்சிகளில் அவர் சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவாரு, தெரியாத கல்யாண வீட்டில் சாப்பிட சென்று எப்போ மாட்டிக் கொள்வோமோ என்கிற பயத்திலேயே சாப்பிடும் காட்சிகள், அடிவாங்கி, மிதி வாங்கி நம்மை சிரிக்க வைக்கிறார்.

அந்த கதாபாத்திரத்தில் இருக்கும் வலி நிறைந்த பகுதியை எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே அந்த கோணத்திலேயே பார்க்கத் தொடங்கி விட்டேன். இது மாறணும் என்கிற முயற்சியில் தான் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளேன் என மாரி செல்வராஜ் பேசிய பேச்சை கேட்ட ரசிகர்கள் “பைத்தியமா இவன்” என வடிவேலு வசனத்தை போட்டே கலாய்த்து வருகின்றனர்.

வடிவேலுவின் டபுள் மீனிங் காமெடி பார்க்கலயா: வில்லு, சந்திரமுகி, மருதமலை, தில்லாலங்கடி, குசேலன் என பல படங்களில் பல விதமான டபுள் மீனிங் காட்சிகளில் வடிவேலு நடிச்சிருக்காரே, அதையெல்லாம் மாரி செல்வராஜ் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

“இந்தப் போராளி தான் படப்பிடிப்பில் டென்ஷன் ஆனால் கலக்கப்போவது யாரு பார்ப்பாரு. ஒரு வயதானவர் நடிக்கத் தெரியலன்னா பளார்ன்னு அறைவாரு. நீ எதிர்பாக்குற சமூக நீதி சுயமரியாதை உன் செயலில் இருக்கணும். அப்புறம் பப்ளிக்கு பாடம் எடு” என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.