வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளன. இதுவரை இல்லாத அளவாக சென்செக்ஸ் 64 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 19 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தது.
பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 621.07 புள்ளிகள் உயர்ந்து 64,037.10 ஆக வர்த்தகம் ஆனது. நிப்டி 193.85 புள்ளிகள் உயர்ந்து 19,011.25 ஆக வர்த்தகம் ஆனது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிக வரத்து காரணமாக பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்தன. பங்குச்சந்தைகள் விலை உயர்வு காரணமாக ரிலையன்ஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை நல்ல பலனடைந்தன.
பங்கு வர்த்தகத்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க பொருளாதார தகவல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக நிப்டி உயர்வை சந்தித்ததாகவும், 2024.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கியதாக அவர் கூறினார். நிப்டி உயர்வு காரணமாக, அதானி நிறுவனத்தின் பங்குகள் விலை 5 சதவீதம் உயர்வை சந்தித்தன.
தொடர்ந்து வர்த்தக நேர முடிவில், நேற்றை(ஜூன் 27) காட்டிலும் சென்செக்ஸ், 499 புள்ளிகள் உயர்ந்து 63,915.42 ஆகவும், நிப்டி 154.70 புள்ளிகள் உயர்ந்து 18,972.10 ஆகவும் வர்த்தகமானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement