வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு, வரும் செப்., 15 வரை பரிந்துரைகள் ஏற்கப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.’
பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ’ ஆகியவை நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். 1954-ல் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று
அறிவிக்கப்படுகின்றன.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமையியல் உட்பட, பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு, மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யும் நடைமுறை, கடந்த மே 1ல், https://www.awards.gov.in என்ற இணையதளத்தில் துவங்கியது.
இதன்படி, ஒருவர் தான் செய்த சேவை அல்லது சாதனையை குறிப்பிட்டு, தன்னைத் தானே பரிந்துரை செய்யலாம் அல்லது மற்றவர்களை பரிந்துரை செய்யலாம். இந்நிலையில், ‘பத்ம விருதுகளுக்கு வரும் செப்., 15 வரை ஆன்லைனில் பரிந்துரை ஏற்கப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement