திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே திருக்கொடிதானத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திருக்கொடிதானம் பகுதியை சேர்ந்தவர் ரிஜோமோன் ஜானி 32. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியுடன் ஜானிக்கு பழக்கம் ஏற்பட்டது. மாணவியை பல இடங்களுக்கு ஜானி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி பக்கத்து வீட்டு இளம்பெண்ணின் போனில் இருந்து ரிஜோமோன் ஜானியை அழைப்பார். இதில் அந்த பெண்ணுக்கும் ரிஜோமோன் ஜானிக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் சுற்ற துவங்கியுள்ளார். அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெற்றோர் கொடுத்த புகாரின் மீது ரிஜோமோன் ஜானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த பத்தணந்திட்டா போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், ரிஜோமோன் ஜானிக்கு 48 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement