Successive retirement of judges: The Supreme Court collegium is going to see a change | அடுத்தடுத்து நீதிபதிகள் ஒய்வு : மாற்றம் காணப்போகிறது உச்சநீதிமன்ற கொலீஜியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அடுத்தடுத்து ஒய்வு பெற உள்ளதால், நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இதில் நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், அஜய் ரஸ்தோகி ஆகியோர் கடந்த 17ம் தேதி ஓய்வு பெற்றனர். மற்றொரு நீதிபதியான வெ.ராமசுப்பிரமணியன் நாளை (ஜூன்29) ஓய்வுபெறுகிறார்.

latest tamil news

அவா்கள் மூவரும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்தனா்.

தவிர உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட் , எஸ்.கே.கவுல் ஆகியோர் இந்தாண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். நீதிபதிகள் அடுத்தடுத்து பணி ஓய்வு காரணமாக, கொலீஜியத்தில் மாற்றம் ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுபேற்றது முதல் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டிய பொறுப்பு சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்துக்கு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.