விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற டாடா பஞ்ச் எஸ்யூவி காரின் அடிப்படையிலான எலக்ட்ரிக் மாடலாக சோதனை செய்யப்பட்டு வருகின்ற படங்கள் வெளியானது. தோற்ற அமைப்பில் ஒரே மாதிரியாக தெரிந்தாலும் சிறிய அளவிலான பல்வேறு மாற்றங்களை பெற்றிருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பாக முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்ட பஞ்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இரண்டாவது முறையாக தற்பொழுது புதிய அலாய் வீல், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட மாற்றங்களுடன் நவீனத்துவமான பல வசதிகள் உறுதியாகியுள்ளது.
Tata Punch EV
ALFA பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள முதல் மாடலான பஞ்ச் எலக்ட்ரிக் காரில் அனேகமாக 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315Km/charge மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250Km/charge ஆக இரண்டு ஆப்ஷனை பெறக்கூடும். ஆனால் எந்தவொரு பேட்டரி பேக் ஆப்ஷனையும் தற்பொழுது வரை டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தவில்லை.
கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள டிசைன் அம்சங்களை பெறவிருக்கும் பஞ்ச் காரில் 360-டிகிரி கேமரா, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களுடன் வரவுள்ளது.
டாடா சிஎன்ஜி பதிப்பில் பஞ்ச் காரை வெளியிட உள்ள நிலையில், விரைவில் எலக்ட்ரிக் காராகவும் பஞ்ச் மாடலை ரூ. 10 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்யலாம். இந்திய சந்தையில் கிடைக்கின்ற சிட்ரோன் eC3 எஸ்யூவி ரூ. 11.50 லட்சம்-12.43 லட்சம் மற்றும் MG காமெட் ரூ. 7.78 லட்சம்-9.98 லட்சம் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும்.