Vijay:விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்கலாம், ஆனால்…: உதயநிதி ஸ்டாலின்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு அரசியலுக்கு வர விருப்பம் உண்டு. அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து பார்க்க தளபதி ரசிகர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!
இந்நிலையில் தான் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார் விஜய். அது வெறும் கல்வி விருது விழா மட்டும் அல்ல விஜய்யின் அரசியல் வருகையை அறிவிக்கும் விழா என்றே ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

விஜய் நடித்த குருவி படம் மூலம் தான் கோலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்
உதயநிதி ஸ்டாலின்
. அப்படி இருக்கும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பாரா உதயநிதி என்கிற கேள்வி எழுந்தது.

நாமாக பேசுவதை விட்டுவிட்டு உதயநிதி ஸ்டாலினிடமே கேட்டுவிடலாம் என்று கேட்டால், அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

அண்மையில் விஜய் நடத்திய நிகழ்ச்சி அவரின் அரசியல் வருகைக்கான ஆரம்பமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்.

அவரிடம் கேட்காமல் அது பற்றி அனைவரிடமும் கேட்டு வருகிறார்கள். விஜய் தான் ஒரு முடிவு எடுத்து பதில் அளிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரை விஜய் பாராட்டியது நல்ல விஷயம். ஆனால் அவர் அரசியலுக்கு வரும்போது தன் கொள்கைகள் குறித்து விளக்க வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எங்கள் கட்சிக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றது. மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற கொள்கைகள் உள்ளன. விஜய்யின் அரசியல் கொள்கைகள் எங்கள் கட்சி கொள்கைகளுடன் ஒத்துப் போனால் அவருடன் சேர்ந்து பயணிக்கலாம் என்றார்.

விஜய்யும், உதயநிதி ஸ்டாலினும் தற்போது பேசிக் கொள்வது இல்லை. இருப்பினும் விஜய் செய்த காரியத்தை பாராட்டியதுடன், அவரின் கொள்கைகள் ஒத்துப் போனால் கூட்டணி வைப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது தளபதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படம் நாளை அதாவது ஜூன் 29ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்ய அளித்த பேட்டியின்போது தான் விஜய் பற்றி பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Ajith: வெயிட்டை குறைச்சு செம ஃபிட்டா, ஸ்டைலா மாறிய அஜித்: இது தான் விடாமுயற்சி

மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் உதயநிதி. முழு நேரமும் மக்கள் பணி செய்ய விரும்பி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். உதயநிதியின் கடைசி படம் என்பதால் மாமன்னன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதற்கிடையே படத்தில் நான் சாதாராண மன்னன், வடிவேலு தான் மாமன்னன் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஹீரோவை விட வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரமா என ரசிகர்கள் வியக்கிறார்கள்.

கல்வி விருது விழாவை நடத்திவிட்டு லியோ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார் விஜய். அவர் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு முன்பாவது அரசியல் வருகை குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.