என் மகன் ரொம்பவே லூட்டி அடிக்கிறான்.. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்

சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) எனது மகன் என்னைவிட ரொம்பவே லூட்டி அடிக்கிறான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அந்த டீசண்ட் வரவேற்பு கொடுத்த உற்சாகம் உதயநிதியை அடுத்தடுத்த படங்களில் நடிக்க தூண்டியது.அதன்படி அவரும் பல படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இடையில் வந்த மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.

நடிகர் டூ அமைச்சர்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். அதேசமயம் கடைசி படம் தரமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

மாமன்னன்: எனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் தனது கடைசி படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் உதயநிதி.

மாமன்னன் ரிலீஸ்: இந்தச் சூழலில் மாமன்னன் படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான கடைசி படமாக மாமன்னன் அமைந்துவிட்டது என்றும் புகழாரம் சூட்டுகின்றனர்.

உதயநிதி பேட்டி: இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “கிருத்திகா 12ஆம் வகுப்பு படிக்கும்போது நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தேன். 7,8 வருடங்களாக இரண்டு பேரும் காதலித்தோம். இதுகுறித்து எனது தந்தையிடம் தனியாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டேன்.

ஓவர் லூட்டி: காதல் திருமணம் இப்போதைக்கு சாதாரணம் ஆகிவிட்டது. என் மகன் இன்பநிதியும் நான் பண்ணியதைவிட அதிகம் லூட்டி அடிக்கிறான். அவனிடமே நான் சென்று பார்த்து பண்ணுப்பா. வயதுக்கு ஏற்ற மாதிரி பண்ணுப்பா என கூறியிருக்கிறேன். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலின் இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறாரே என தெரிவித்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.